Wednesday 28 February 2024

இது ஒரு கொலை ; சட்டப்படி இடம்பெற்ற கொலை ; சாந்தனின் மரணம் குறித்து சீமான்..!!!

SHARE

இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

சாந்தனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு முகாம் என்றால் அது சிறப்பு முகாம் ஆகிவிடுமா அது ஒரு வதைமுகாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

அதில் போய் சாந்தனை அடைத்துவைத்திருந்தார்கள்இரத்தஉறவுகள் தவிர வேறு யாரும் அங்கு அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மனுக்கொடுத்து பார்க்கமுடியாது நான் கூட மனுகொடுத்து போய்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் இங்குவைத்து விடுதலை செய்யவில்லை என்றால் பொதுச்சிறையிலாவது அடைத்துவையுங்கள் என கேட்டோம்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட பேரறிவாளன் நளினி போன்றவர்கள் வெளியே உள்ளனர் அவர்களால் இந்த நாட்டில் சட்டமொழுங்கு பாதிக்கப்பட்டதாக என கேள்வி எழுப்பியுள்ள சீமான் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் நாங்கள் அவர்கள் தாய்தந்தையிடம் கேட்கவேண்டும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என அவ்வாறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

ரொபேர்ட் பயாசை இரண்டு மாதங்கள் சிறைவிடுவிப்பில் விடுவித்தீர்கள் சமூகத்திற்கு சட்டமொழுங்கிற்கு கேடுவிளைவிக்கும் விதத்தில் அவர் நடந்துகொண்டாரா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் பேரறிவாளனிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்புதான் அனைவருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர் அப்படி எனும் போது அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்வதற்கு நீங்கள் அனுமதித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தனுடைய கடைசி விருப்பம் கடைசியாக தாயை பார்த்து ஒருவாய் சோற்றை அவர் கையால் சாப்பிடவேண்டும் என்பதுதான்,அதைக்கூட நிறைவேற்றிவைக்கமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள சீமான் இது ஒரு சட்டக்கொலை அவ்வளவுதான் நியாயமாக இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE