கொவிட் தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் ஏற்படுகின்றமை சர்வதே ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து இது குறித்து இலங்கையின் சுகாதார துறையினர் விழிப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச ஆராய்ச்சியின் பாரதூர தன்மை காரணமாக இலங்கை எச்சரிக்கை நிலைக்கு செல்வது சிறந்த விடயம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் கொவிட்தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து இலங்கை எச்சரிக்கை நிலையில் இருப்பதும் விழிப்புணர்வையும் அவதானிப்பையும் பேணுவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த ஆராய்;ச்சி இலங்கை சூழமைவிற்கு மாறான ஒரு சூழமைவில் மேற்கொள்ளப்பட்டதால் இதனை இலங்கையுடன்பொருத்திபார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜயசிங்க மேலும் மரபணுக்கள் உட்பட பல விடயங்கள் இந்த விடயத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் சுகாதார அமைச்சு நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் உள்நாட்டில் கொவிட் தடுப்பூசிகளின் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தற்போது காணப்படும் நோய்கள் உடல்பாதிப்புகளிற்கு கொரோனா தடுப்பூசிகளே காரணமாகயிருக்கலாம் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்றுகாலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய தடுப்பூசிகளே தற்போது பலநாடுகளில் காணப்படும் பல நோய்களிற்கு காரணமாகயிருக்கலாம் என்பது குளோபல் வக்சின் டேட்டா நெட்வேர்க் என்ற அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியா கனடா உட்பட எட்டு நாடுகளில் சுமார் 100 மில்லியன் மக்களை இந்த அமைப்பு ஆய்விற்குட்படுத்தியுள்ளது.வக்சின் சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொவிட் தடுப்பூசிகளிற்கும் சில மருத்துவநிலைகளிற்கும் இடையில் தொடர்பிருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தடுப்பூசி காரணமாக நரம்பியல் இரத்தம் இதயம் தொடர்பான பாதிப்புகள்ஏற்பட்டுள்ளன என ஜிவிடிஎன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மொடேர்னா தடுப்பூசி போட்டவர்களிற்கு மயோகார்டிடிஸ் எனப்படும் இதய தசை பாதிப்பு ஏற்படுவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை தடுப்பூசிகள் மூளையில் இரத்த உறைவு மற்றும் நரம்பியல் கோளாறு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
முதுகுத்தண்டு வீக்கம் மூளை மற்றும் முதுகுதண்டு வடத்தில் வீக்கம் போன்றவை மொடேனா தடுப்பூசி பயன்படுத்தியவர்கள் மத்தியில் காணப்படுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Tags:
sri lanka news