முகநூலால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள் ; முப்பதாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள்..!!!



இலங்கையில் முகநூல் தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான 10774 சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5188 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7499 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடிகள் தொடர்பில் 1609 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, குருணாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இவ்வாறான அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here