தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!!


கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here