விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி..!!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று 12.02.2024 பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் இருந்த குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Previous Post Next Post


Put your ad code here