யாழில் பெண் உயிரிழப்பு - இடமாற்றம் காரணமா ?


யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது. இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனாலும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அதனால் மனவிரக்தியில் காணப்பட்டவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here