மரணத்தில் இருந்து தப்பித்த ‘ரஷ்மிகா’


பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்மிகா மந்தனாவுடன் ஷ்ரத்தா தாஸும் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த பயணத்திற்கு மாற்று விமானத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மாற்றியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரஷ்மிகா மந்தனா, ‘இன்று மரணத்திலிருந்து தப்பித்தோம்’ என கூறியிருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here