கார்த்தியின் ‘தங்கையாக’ மாறிய பிரபல நடிகை..!!!



தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது தன்னுடைய 26 மற்றும் 27-வது படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படம் அவரின் 26-வது படமாக உருவாகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஆனந்தராஜ் நடித்து வருகின்றனர்.

மறுபுறம் ’96’ புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘மெய்யழகன்’ அவரின் 27-வது படமாக அமைந்துள்ளது. தற்போது காரைக்குடி, கும்பகோணம் பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கார்த்தி ஜோடியாக ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் புகழ் சுவாதி கொண்டேவும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்து வரும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நட்பு, காதல், குடும்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிராமத்து பின்னணியை அடிப்படையாக வைத்து படத்தின் கதையை பிரேம்குமார் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் கார்த்தியின் தங்கை வேடத்தில், பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வழியாக தமிழில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா ‘ஜீவா’,’வெள்ளைக்கார துரை’,’காக்கி சட்டை’, ‘ஈட்டி’, ‘பென்சில்’ , ‘மருது’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here