பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு கொடுத்த உணவில் புழு..!!!


கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான டேர்டன்ஸ் வைத்தியசாலையில் (Durden's Hospital) நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு ஒன்று இருந்துள்ளதை அடுத்து வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி இதய நோயாளி என்றும், அவருக்கு வழங்கப்பட்ட ப்ரோக்லி இல் குறித்த புழு இருந்ததாகவும் நோயாளியின் மகள் உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் மேலும் உணவக ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here