பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன்..!!!


அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு வயது பாலகனே உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் , கேற் திறந்திருந்ததும் தற்செயலாக ரோட்டிற்கு ஓடி வந்துள்ளார் . அப்போது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில், சிறுவனின் பிறந்த தினம் மார்ச் 21 ஆம் திகதி வரவுள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here