யாழில் விபத்து - மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் நெல் உலர் வைத்த போது விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாரையடி கூவில் பகுதியைச் சேர்ந்த பரராஜசேகரம் நாகேந்திரன் (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதி விபத்துக்குள்ளாகியது.

பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here