யாழில் புகையிரதத்தை மறித்து பொதுமக்கள் போராட்டம்..!!!


யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி இன்று (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றை பொதுமக்கள் முன்னெடுத்தனர்.

குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6:45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பலத்த கோஷம் எழுப்பி பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயிரை காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பொதுமக்கள், கிராம மட்டத்தை சேர்ந்தவர்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous Post Next Post


Put your ad code here