வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன் இசையமைத்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரஷாந்த் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது வில்லன் குறித்த முக்கிய தகவலொன்று வெளியாகி இருக்கிறது.அதன்படி இரண்டு விஜய்களில் ஒரு விஜய் வில்லனாக வருகிறாராம். அது மட்டுமின்றி மோகன் தான் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருவதாகவும் தெரிகிறது.
இதனை ‘GOAT’ படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனராம். புதிய போஸ்டர்களை வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வருவதற்கு காரணமும் இதுதானாம். பல ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள மோகனுக்கு படத்தில் நல்ல வெயிட்டான கதாபாத்திரத்தினை வெங்கட் பிரபு அளித்துள்ளாராம்.
பொதுவாக பண்டிகை தினம் விஜய்க்கு ராசி என்பதால் தீபாவளி விருந்தாக ‘GOAT’ படம் திரைக்கு வரவுள்ளதாம். அந்தவகையில் நீண்ட நாட்கள் கழித்து தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவிருக்கிறது.
