சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வந்து ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் சந்திரன் மேல் படும் போது ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் ஒரு ஆண்டில் இரண்டு முறை நிகழும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி நிகழ்கிறது. இந்நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இப்படி ஹோலி பண்டிகை நாளில் சந்திர கிரகணம் நிகழ்வது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் இந்த சந்திர கிரகணம் சற்று முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆனால் ஹோலி நாளில் சந்திர கிரகணம் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், விருப்பங்கள் நிறைவேறக்கூடியதாகவும் இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணமானது நற்பலனைத் தரும். குறிப்பாக வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்தால் அல்லது ஏற்கனவே செய்திருந்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். மேலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது அற்புதமான பலன்களைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தை பெறுவார்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ஆளுமையிலும் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் தேடி வரும். முக்கியமாக இந்த கிரகணத்தால் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பொருள் இன்பங்களைத் தருவதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
Tags:
Rasi Palan