100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்..!!!


வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழ்வதோடு, சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வந்தாலும், ஏப்ரல் 09 ஆம் தேதி மீன ராசிக்குள் வக்ர நிலையில் மீண்டும் நுழைந்து பயணிப்பார்.

இப்படி நுழையும் போது மீன ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருவதால், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே நேரத்தில் மீனத்தில் சுக்கிரனும், புதனும் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குவர். இப்படி ஒரே வேளையில் புதாதித்ய ராஜயோகமும், லட்சுமி நாராயண ராஜயோகமும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நிகழ்வதாக ஜோதிடர்கள் கூறுகின்றன.

இவ்விரு ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோங்களால் அதிர்ஷ்டம் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண மற்றும் புதாதித்ய ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமனத்தில் உயர்வு ஏற்படும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளை செய்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகமும், புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ன. தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாகனம் அல்லது நிலத்தை வாங்கும் லாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Previous Post Next Post


Put your ad code here