பாடசாலைகளில் தரம் 8 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு புதிய மாற்றம்..!!!



பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு
தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் 19 திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் இதன் மூலம் சர்வதேச தரத்திற்கமைவாக இந்நாட்டு மாணவர்களுக்கு பாட அறிவை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here