க.பொ.த சா/த பரீட்சையில் வரவுள்ள அதிரடி மாற்றம்..!!!





க.பொ.த சா/த பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை (மார்ச் 05) முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் இந்த பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Put your ad code here

Previous Post Next Post