யாழ் - இளவாலை, சேந்தான்குளம் கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடலில் நீராடச் சென்ற 37 , 21 வயதான ஆண்கள் இருவரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மூவர் கடலில் நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கியதுடன், அவரை காப்பாற்றச் சென்ற மற்றையவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
யாழ் - ஆரியகுளம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரும், அங்கு பணிபுரிபவரும், விடுதியில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவருமே நீராடச் சென்றுள்ளனர்.
நேற்று(20) மாலை வேளையில் மீட்கப்பட்ட இருவரிடன் சடலங்களும், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.