ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்..!!!


புனித ரமழான் நோன்பு செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு திங்கட்கிழமை (11) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் என பலரும் ஆகிய அமைப்புக்களில் இருந்து குறிப்பிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதற்கமைய நாளை செவ்வாய்க்கிழமை (12) ரமழான் நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here