வீட்டுக்கு வெளியில் உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொல்புரம் கிழக்கைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வரதி (வயது 48) என்பவரே இவ்வாறு நேற்று(17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் கணவரும், மகளும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்
தபோது, வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தார்.