வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரனும் மேஷ ராசிக்குள் செல்கிறார். இதனால் மேஷ ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான கதவுகள் இந்த யோக காலத்தில் திறக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் திட்டங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
Tags:
Rasi Palan
