நாடளாவிய ரீதியில் 29ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும்?


பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அகில இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கல்வியியற் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவது தொடர்பான வரைவை முன்வைத்தல், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு தடையில்லா பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் அவ்வப்போது கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்காததால் அதனை வெற்றி கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் தம்மிக்க மிரிஹான தெரிவித்தார்.

மேலும், கல்லூரிகளை பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துவது தொடர்பான வரைவு சட்ட வரைவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சகத்திடம் உள்ளதாகவும், தேர்தலுக்கு முன் வரைவு நிறைவேற்றப்படாவிட்டால், செயல்முறை பின்னோக்கி செல்லும் என்றும் அவர் கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here