வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த மீன ராசியில் சூரியனும், சுக்கிரனும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் புதனும் சென்றிருப்பதால், திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த மூன்று கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் இந்த யோகமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
மேலும் இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும், லாபமும் கிடைக்கும். இப்போது மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவுகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் படி இருக்கும். பேச்சால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். சில புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு இக்கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
Tags:
Rasi Palan
