வருகிற குரோதி தமிழ் புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!!!



தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டு தான் குரோதி ஆண்டு. குரோதி என்றால் பகைக்கேடு என்று பொருள். இந்த குரோதி தமிழ் புத்தாண்டு வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. வருகிற குரோதி தமிழ் புத்தாண்டில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.

முக்கியமாக இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்தாலும், மே மாத தொடக்கத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். மேலும் இந்த குரோதி ஆண்டில் சனி பகவான் கும்ப ராசியிலும், ராகு கேது மீனம் மற்றும் கன்னி ராசியிலும் பயணிக்கவிருப்பதால், இந்த தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது குரோதி தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் புதிய வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகளை இந்த ஆண்டில் வீழ்த்துவீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் அது முடிவுக்கு வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதே வேளையில் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். தடைபட்டு வந்த முக்கிய வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் புதிய தொழிலைத் தொடங்கி முதலாளி ஆக வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வானம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு புதிய காதல் மலரும். காதலித்து வந்தால், காதல் திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் மனக்கசப்பு காரணமாக பிரிந்திருந்தால், இந்த குரோதி ஆண்டில் இணைவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிந்து வந்தால் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்து வந்தால், அந்த தொழிலை இந்த ஆண்டில் விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.


துலாம்

துலாம் ராசிக்காரர்கள் குரோதி தமிழ் புத்தாண்டில் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. கடனாக கொடுத்த பணம் இந்த ஆண்டில் கைக்கு வந்து சேரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரோதி தமிழ் புத்தாண்டில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் குரோதி தமிழ் புத்தாண்டில் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் வேலையில் நல்ல மாற்றத்துடன் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு மனதளவில் தைரியத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த முக்கியமான வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக நடைபெறும். சிலர் புதிய இடத்தை வாங்கி, வீடு கட்டுவார்கள். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இந்த ஆண்டில் அது நிறைவேறும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


Previous Post Next Post


Put your ad code here