யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை காலமானார்.
நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
Tags:
sri lanka news