கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news