கதிரையில் அமர்ந்து உணவு உண்ணும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று கோப்பாய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீரபத்திரர் கோவில் வீதி கோப்பாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் (வயது 72).
பிரஸ்தாபநபர் மயங்கி விழுந்ததையடுத்து கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.