யாழில். பனைமரம் முறிந்தால் மின் தடை..!!!


யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(12) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்போது சங்கானை 07ஆம் கட்டையிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இரு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை வீதியில் எவரும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here