Friday 12 April 2024

சனிக்கிழமையில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

SHARE

சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானின் நாள் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த நாளில் தவறுதலாக கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது. அப்படி செய்துவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சனி பகவான் ஒவ்வொருவரின் செயல்களின் அடிப்படையில் அவர்களுக்கு சரியான தண்டனை அல்லது வெகுமதியை அளிக்கிறார். யாரிடம் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்க அதிக நேரம் எடுக்காது. மறுபுறம், அவர் ஒருமுறை கோபமடைந்தால், எல்லாம் நாசமாகிவிடும். சனிபகவானின் அருள் உங்கள் மீது நிலைத்திருக்க வேண்டுமென்றால், இந்த நாளில் தவறுதலாக இந்த காரியங்களைச் செய்யாதீர்கள்... அது என்னென்ன காரியங்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக அமையும். அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது சில சமயங்களில் துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்காதீர்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.

ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம்.சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்த நாள் அல்ல.

உப்பை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்காதீர்கள். வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு. சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதனால் வெள்ளி கிழமையில் மட்டுமே வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.

அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. சனி பகவானுக்குரிய எள்ளையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. ஆனால் எள் எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் ஏற்படும்


சனிக்கிழமையன்று தேவைப்படுபவர்களுக்கு சுத்தமான காலணி அல்லது செருப்புகளை தானம் செய்வதன் மூலம் சனி தோஷங்கள் நீங்கும், ஆனால் தவறுதலாக இந்த நாளில் காலணிகள் மற்றும் செருப்புகளை பரிசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, இல்லையெனில் எதிர்மறை சக்தி உங்கள் வீட்டிற்குள் நுழையும். இந்த நாளில் ஆதரவற்றவர்கள், ஏழைகள் அல்லது முதியவர்கள் யாரையும் தவறுதலாக அவமதிக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எண்ணெயில் தீபம் ஏற்றவும்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமையன்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஆனால் இதற்காக இந்த நாளில் தவறுதலாகக் கூட கடுகு எண்ணெய் வாங்கக் கூடாது. அதற்கு பதிலாக, வீட்டில் ஏற்கனவே வைத்திருக்கும் கடுகு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

SHARE