வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!!



மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது.

மூதூர் - பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

பெரியவெளி குளத்து வயலில் இன்றைய தினம் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், வெயிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள் வெயில் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here