கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் தடம் புரண்டது : ஒருவர் காயம்..!!!


கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று தடம் புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 5.40 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால், வீதியின் நடுவே வாகனம் தடம் புரண்டுள்ளது.

இதன்போது அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனையோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளான ஏ9 வீதியூடான போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post


Put your ad code here