யாழில் குடும்பப் பெண் பரிதாப உயிரிழப்பு..!!!


மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 3 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண், வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது , பாத்திரங்களை அடுப்பிலிருந்து இறக்குவதற்குப் பயன்படுத்தும் துணி மண்ணெண்ணெய் அடுப்பில் (குக்கரில்) சிக்கியுள்ளது.

இந்நிலையில்,மண்ணெண்ணெய் அடுப்பில் சிக்கிய துணியை இழுக்கும் போது அடுப்பு சரிந்து அவர் மீது வீழ்ந்து வெடித்து எரிந்துள்ளது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பப்பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் கொட்டடியைச் சேர்ந்த 39 வயதுடைய சுபனேந்திரன் இலங்கேஸ்வரி என்ற குடும்பப்பெண்ணே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here