க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!



க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சார்த்திகளின் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here