பஸ்களில் நூதனக் கொள்ளை - மக்கள் அவதானம்..!!!


வெளிமாவட்டங்களுக்கு பஸ்களில் பயணிக்கும் மக்கள், கொள்ளையர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறான கொள்ளை குழுக்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தரப்பினர் சாதாரண பயணிகளை போன்று பஸ்களில் பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் அதிக கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பஸ்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here