யாழில். 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி..!!!



வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது.

நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here