இளைஞர் கொலை ; காதலி கைது ..!!!



குளியாப்பிட்டிய பகுதியில் இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது காதலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுக்ஹென வஸ்ஸவுல்ல பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய காதலியான சந்தேகநபர், கொலை செய்ய உதவியமை மற்றும் கொலை குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குளியாப்பிட்டிய, கபலேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசித ஜயவன்ச என்ற இளைஞன் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.


இதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில், காணாமல்போன இளைஞன் மாதம்பேயில் பனிரெண்டாவ வனப்பகுதியில் மே மாதம் 7 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காதலி, பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், பிரதான சந்தேகநபரின் இரண்டு மகன்களும், பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவரும் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில், பிரதான சந்தேக நபரான ‘சிங்கிதி’ எனப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி டிலானி ரசிகா ஆகியோர் கடந்த மே மாதம் 06 ஆம் திகதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here