யாழ் தீவகத்திற்கான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தம்..!!!


யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு , எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன

பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

படகு சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில், யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே பிரஸ்தாபிக்கப்பட்டு , இந்த விடயம் தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ளுமாறும், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மாவட்ட பதில் செயலருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட இணை தலைவர்களை அறிவுத்தியுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here