யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.