திருகோணமலையில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் தனது நாடு திரும்பிய இளைஞர் இன்று அதிகாலை காலை விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த இளைஞர் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ள நிலையில், இளைஞனின் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.
சம்பவத்தில் திருகோணமலை நகரப்பகுதியைச் சேர்ந்த றீகன் றேனீஸ்சான் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டிக்கு சென்று தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அண்மையில் விடுமுறையில் ஊர் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது .
இந்நிலையில் சடலம் உடல்கூற்று சோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news