
கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் நேற்று தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
Tags:
sri lanka news