யாழ்ப்பாணம் - தீவங்களுக்கு இடையிலான படகு சேவைகள் இரத்து..!!!


வடக்கில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் பகுதியில் இருந்து தீவுகளுக்கு செல்லும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிகாட்டுவான் - நயினாதீவுக்கான படகு சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.

குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு , எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளுக்கான படகு சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை நயினாதீவுக்கான படகு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான பயண சேவைகள் இடம்பெறுகின்றன.


வெள்ளிக்கிழமை ஆகையால் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் செல்லும் நிலையில் , வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு , நயினாதீவில் உள்ள நாக விகாரைக்கு பெருமளவான தென்னிலங்கை மக்கள் செல்லும் நிலையில் , படகு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, படகுகள் பாதுகாப்பான பயண சேவையில் ஈடுபடுகின்றன.
Previous Post Next Post


Put your ad code here