
யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது , பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த முறை அறிவுறுத்தப்பட்டஅறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து , திருத்த வேலைகளை செய்யாதமை , தொடர்ந்து சுகாதார சீர்கெட்டுடன் உணவகத்தினை நடாத்தி சென்றமை உள்ளிட்டவற்றை கண்டறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , திருத்த வேலைகள் முடிவடையும் வரையில் உணவகத்தை சீல் வைத்து மூட உத்தரவிட்ட மன்று , 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது