யாழில். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றத்தில் இளைஞர்கள் கைது..!!!



யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில் இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


தகவலின் பிரகாரம் பேருந்து நிலையத்திற்கு விரைந்த பொலிஸ் குழு அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

அதன் போது , இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை நான்கு இளைஞர்களையும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை , கடமைக்கு இடையூறு விளைத்தமை , பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் ,அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here