Wednesday 21 August 2024

இன்றைய ராசிபலன் - 21.08.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாடாக இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் வரும். தொழிலில் எதிர்பாராத லாபத்தால் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும். மன நிறைவான இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். ஆனால் வாழ்க்கை துணையிடம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனையில் எந்த விஷயத்திலும் பொய் சொல்லி சமாளிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள். அப்போதுதான் குடும்பத்தில் சந்தோஷம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. முயற்சிகளை நாளை தள்ளி போடவும். எந்த நேரமாக இருந்தாலும் கடைசி வரை தள்ளி போடாதீங்க. இன்றைக்கான வேலையை இன்றே செய்து முடித்து விடுங்கள். சோம்பேறித்தனம் இன்று இருக்கக் கூடாது பாத்துக்கோங்க.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று வேலையை எல்லாம் பக்காவாக பிளான் பண்ணுவீங்க. ஆனால் எந்த வேலையும் சரியாக நடக்காது. இடையூறாக நிறைய தடங்கல்கள் வரும். தடங்கல்களை எல்லாம் எதிர்த்து போராடும்போதுதான் வெற்றி காண முடியும். கவலைப்படாதீங்க கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றான். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். வேலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் கூட விலகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சுப காரியத்தடை விளக்கும். சந்தோஷம் பிறக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எந்த விஷயத்திலும் துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக மிக அவசியம். தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பெரியவர்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். நிறைய பணம் கொடுத்து எந்த பொருளையும் வாங்காதீங்க. நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக விலை மலிவாக கிடைக்கிறது என்று எந்த பொருளும் இன்று தள்ளுபடியில் வாங்க கூடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி மட்டும் தான் கிடைக்கும். நீங்கள் போன போக்கில் எந்த காரியத்தை தொட்டாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் கைராசியானவர்களாக இன்று வலம் வரப்போகிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் இருப்பவர்களுக்கும் இன்று நல்ல நேரம். வேலை செய்யும் யோகமான இந்த நாளில் கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் கைகூடி வரும். புதிய முயற்சிகளை செய்யலாம். வீட்டில் தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரோடு அதிகமாக நெருங்கி பழக வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். புதிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான யோசனைகளை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்காலத்தில் நிறைய லாபத்தை ஈட்டுவதற்கு உண்டான வழிகளை இன்று உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். தேவையற்ற நட்பை தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று முழுமூச்சோடு உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மேனேஜரின் டார்ச்சர் சில பேருக்கு இருக்கும். தொழிலிலும் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரலாம். எல்லாவற்றையும் சமாளிக்கும் தென்பும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கிறது. கவலைப்படாதீங்க பெரியவர்களின் ஆசிர்வாதத்தாலும் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் இன்று உங்களுக்கு நன்மையே நடக்கும்.
SHARE