Saturday 24 August 2024

யாழில். மின் மோட்டார் திருத்த முற்பட்டவர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் மின் மோட்டார் ஒன்றினை திருத்த முயன்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வீடொன்றில் மின் மோட்டார் வேலை செய்யவில்லை என , ஆலயத்தில் தொண்டு செய்து கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாளர் அழைத்து சென்று காட்டியுள்ளார்.

அதன் போது , அந்நபர் டெஸ்ட்டர் எடுத்து வருமாறு வீட்டு உரிமையாளருக்கு கூறியுள்ளார். அவர் வீட்டினுள் சென்று டெஸ்டர் எடுத்து வந்து பார்த்த போது , ஆலயத்தில் இருந்து அழைத்து வந்த நபர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அந்நபர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு அந்நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் , சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
SHARE