பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்த சுயேட்சை குழு 13..!!!


யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் , சிவகுமாரனின் சகோதரியிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, தமது தேர்தல் பிரச்சாரங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.




Previous Post Next Post


Put your ad code here