மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எந்த செயலை கொடுத்தாலும் அதை மன நிறைவோடு சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்தீர்கள். வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் இருக்காது. சின்ன சின்ன சங்கடங்கள் வந்து போகும். தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். இந்த நாளை நடத்திச் செல்ல கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனம் இருக்கட்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் எடுத்து சாதித்து காட்டுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று மன நிறைவோடு லாபத்தை அடைவீர்கள். தீபாவளியை கொண்டாட தயாராகி விடுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இந்த நாள் சுப நிகழ்ச்சிகள் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகளும் ஏற்படும். மன நிறைவோடு இந்த நாளை கடந்து செல்லலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை ஏமாற்ற நினைத்தாலும், அது நடக்கவே நடக்காது. வியாபாரத்திலும் வேலையிலும் நீங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்க, இந்த நாள் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மனதில் பெருசாக எந்த பாரமும் இருக்காது. இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாக கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த உறவுகள் ஒன்று சேரும். மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். அண்ணன் தம்பி மாமியார் மருமகள் இது போன்ற உறவுகளிலிருந்து பிரச்சனைகள் விலகும். புரிதல் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையும் சரியாக நடக்காது. யாரிடமாவது உதவி என்று போய் கேட்டால் அதுவும் உபத்திரமாக முடிந்துவிடும். இந்த நாளில் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். புது முயற்சிகளை செய்ய வேண்டாம். காலையில் இறை வழிபாடு செய்து விட்டு வேலையை துவங்குங்கள். அன்றாட வேலையை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்தால் போதும். கூடுமானவரை வாயை அடக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதுப்புது யோசனைகள் உண்டாகும். வேலையிலும் செய்யும் தொழிலிலும் உங்களுடைய திறமை வெளிப்படும். குறிப்பாக மெக்கானிக் வேலை செய்பவர்கள், கைத்தொழில் செய்பவர்களுக்கு இந்த நாள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டு சாப்பாடு மட்டும் சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் பெறுசாக இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடந்து முடியும். குடும்ப விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. குறிப்பாக குழந்தைகள் முன்பு சண்டை போடக்கூடாது. உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். மனக்குழப்பம் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன தடைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. விடா முயற்சி நிச்சயம் அந்த தடைகளை தகர்த்தெறியும். மன குழப்பத்தில் இருக்கும் போது புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தெரியாத மூன்றாவது மனிதர்களோடு எந்த ஒரு சாவகாசமும் வைத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உங்களை பாராட்டி சில பரிசு பொருட்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அலுவலகத்தில் போனஸ் கிடைக்கலாம், அல்லது தொழிலில் நீங்கள் உழைத்ததற்கு பெரிய லாபம் கிடைக்கலாம். இது போல ஏதாவது ஒரு விஷயம் உங்கள் மனதை சந்தோஷப்படுத்தும் படி இன்று நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பயம் மனதிற்குள் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன வாக்குவாதம் உங்களுடைய நிம்மதியை கெடுக்கும். ஆகவே நிம்மதியை கெடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் மனசாட்சியை தாண்டி செய்யாதீங்க. மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.
Tags:
Rasi Palan