இன்றைய ராசிபலன் - 26.10.2024..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நல்ல பெயர் கிடைக்கும். தொழிலிலும் வேலையிலும் உங்கள் திறமை முழுமையாக வெளிப்படும். வருமானம் உயரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சிக்கல்கள் எல்லாம் தீரக்கூடிய இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனசு சந்தோசமாக இருக்கும். எல்லா வேலைகளையும் மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கும். சில பேர் தீபாவளி பர்சேஸில் கொஞ்சம் செலவுகளை செய்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இயலாதவர்களை ஆதரிக்க கூடிய அளவுக்கு உங்களுடைய மனது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த தடைகள் விளக்கும். சொந்த பந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிறைய பேருக்கு காரணமே இல்லாமல் சில விஷயங்களை விட்டுக் கொடுப்பீங்க ஏன்னு அடுத்த நாள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியாது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் கோபப்பட மாட்டீர்கள். பக்குவம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக திகழ்வீர்கள். உங்களை பார்த்து நாலு பேர் இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் சொல்லுவார்கள். இந்த அனுபவம் உங்கள் வாழ்க்கையை பக்குவப்படுத்தும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். செய்யும் வேலையில் உற்சாகம் இருக்கும். தேவையற்ற எதிரிகள் நண்பர்கள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும் மனநிலை சீராகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று சில விஷயங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. விலை மலிவான பொருட்களை வாங்க வேண்டாம். தீபாவளி பர்சேஸ்க்கு டிஸ்கவுண்ட் சேல்ஸுக்கு கட்டாயம் போகவே வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் உஷாரா இருங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் அறிமுகம் இல்லாத நபருடன் பேசி பழக வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். கடவுள் உங்களை சோதித்து பார்ப்பார். எந்த பிரச்சனை வந்தாலும் நேர்வழியில் நடந்து கொள்ளுங்கள். பொய் பேசாதீர்கள். கடவுள் உங்களுக்கு நிச்சயம் துணையாக நிற்பான். சில சோதனைகளை கடந்தால் தான் சாதனை படைக்க முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் டென்ஷன் இருக்கும். ஒரு வேலையை திரும்பத் திரும்ப செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எதிரிகளால் பிரச்சனை இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் சின்ன சின்ன தொந்தரவு வந்து போகும். மேலதிகாரிகளின் சப்போர்ட் கிடைக்காது. கவலைப்படாதீங்க உழைப்பை மட்டும் நம்புங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் அவசரப்பட மாட்டீர்கள். இதனால் பாதி சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து விடுபடும். அதாவது வரும் சிக்கலில் இருந்து தப்பிப்பீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். குழந்தைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று சுப செலவுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீடு மாற்றுவது, அலுவலக மாற்றம் இது போன்ற ஏதாவது ஒரு வேலை உங்களுக்கு இருக்கும். கொஞ்சம் அலைச்சலும் உண்டாகும். நினைத்ததை சாதித்துக் காட்டக்கூடிய நாள் இது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி சண்டைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். தேவையில்லாத விஷயத்திற்கு கவுரவம் பார்க்க கூடாது. விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here