முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(19.10.2024) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பரந்தன் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதி நோக்கி வேகமாக பயணித்த சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து இவ்வாறு நகைக்கடை ஒன்றுக்கள் புகுந்துகொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது நகைக்கடையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Tags:
sri lanka news