தமிழ் மக்கள் விரும்பும் மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் - வரதராஜன் பார்த்திபன்..!!!


பல தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டியே நாங்கள் எமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து செல்வதாக யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

யாழ் . நகர் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைளை தமிழ் மக்கள் கூட்டணியின் மேற்கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்களின் பிரச்சார நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறுபட்ட சதித்திட்டங்களை அரசு தரப்பினரும் , அவர்களுடன் இணைந்து செயற்படும் தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.

பருத்தித்துறையில் நான் பிரச்சார நடவடிக்கையில் இல்லாத போது எமது ஆதரவாளர்களை மிரட்டி எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க வைத்து , என்னை அங்கு அழைத்தே கைது செய்தனர்.

தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி தான் நாங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் அந்த மாற்றத்தை இளையோரான நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here